எல்லோருக்கும் வணக்கம்! எமது தமிழ் பாடசாலை நாளை சனிக்கிழமையில் ( 28.08.2021 ) இருந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வழமைபோல் Årvoll பாடசாலையில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம். தமிழ் கல்வியுடன் கலை வகுப்புக்களான நடனம், சங்கீதம், சுரதட்டு (keyboard) மற்றும் மேலதிக உதவி வகுப்புகளான கணித, ஆங்கில வகுப்புக்களும் நடைபெறும் என்பதனை மிகமகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம். தமிழ் கற்க ஆர்வமான மாணவர்கள்மழலைகல்வியில் இருந்து ஆண் டு 12 வரையும், மற்றும் Nivå தமிழ் பரீட்சை வகுப்புக்களான தரம் 1, 2, 3 எடுக்கும் மாணவர்களும் எமது பாடசாலையில் இணைந்து கொள்ளலாம் என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். குறிப்பு:- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக Årvoll பாடசாலையில் கல்வி தொடரமுடியாத நிலை ஏற்பட்டாலும் online( Zoom ) மூலம் எமது பாடசாலை நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:-

முத்தமிழ் அறிவாலயம் தொ. எண் : 94097121அன்புடன் முத்தமிழ் அறிவாலயம்.