பாடசாலை கீதம்
பல்லவி
தித்திக்கும் தமிழ் வளர்க்கும்
முத்தமிழ் அறிவாலயம்
எத்திக்கும் புகழ் தழுவி வாழியவே (தித்திக்கும்)
அனுபல்லவி
பக்திக்கு ஏற்ற மொழி
பாவலர் போற்றும் மொழி
பயில்வோர் அகம் தனிலே
பரவசம் ஊட்டும் மொழி (தித்திக்கும்)
சரணம் 1
பண்போடு பல கலைகள்
பாங்கோடு பல கதைகள்
அன்போடு அறநெறிகள்
அதன்வழி அறிவுரைகள் (தித்திக்கும்)
சரணம் 2
சொந்த மண்ணின் நிலை அறிந்தே
இந்த மண்ணின் முறை உணர்ந்தே
நாளை எங்கள் வாழ்வுயர
நற்றுணையாய் விளங்கிடுதே
எழுதியவர்: கார்மேகம் நந்தா