இல்ல விளையாட்டு 2022
நோர்வே முத்தமிழ் அறிவாலயமும், அஸ்கர்பாரும் தமிழ் அறிவாலயமும் இணைந்து நடாத்திய மாணவர் பெற்றோருக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 11.06.2022இல் Skedsmohallen விளையாட்டுமைதானத்தில் விளையாட்டுக்குழு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அடாது மழையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அங்கு வருகைதந்த அனைவருக்கும் இருபாடசாலைகளும் தமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றன